gay and grey rose interiors single lemgoune bekanntschaft ulm monroe tinder chat verlauf issues
Posted By News97 Posted On

கொரோனா தடுப்பூசி குறித்த அறிவியல் தரவை இலங்கைக்கு வழங்க ரஷ்யா தயார்

ஸ்பூட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசி குறித்த அறிவியல் தரவை இலங்கைக்கு வழங்க ரஷ்யா தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுகாதார அமைச்சு, ரஷ்யாவின் சுகாதார அமைச்சு மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சின்

கமலேயா ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் இணையம் மூலமான சந்திப்பு ஒன்றை ரஸ்யாவில் உள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ரஸ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி பற்றி இலங்கை மற்றும் ரஸ்ய அதிகாரிகள் விரிவான விவாதித்தனர்.

தடுப்பூசி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உட்பட்ட விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

இலங்கையில் வைரஸ் மாற்றங்கள் மற்றும் இலங்கையின் நோய்த்தடுப்பு திட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி குறித்து ரஷ்ய நிபுணர்களுக்கு இலங்கை தரப்பு விளக்கமளித்தது.

Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »